சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கம் மேலோங்கட்டும்; பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கம் மேலோங்கட்டும் என ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கம் மேலோங்கட்டும்; பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இஸ்லாமிய மக்கள் பல்வேறு நகரங்களிலும் காலை முதல் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதி, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் அன்பு பற்றிய செய்தியை இந்த ரம்ஜான் தினம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறது. நாட்டில் இருந்து அனைத்து தீய சக்திகளும் நீங்கி, ஒவ்வோர் இடத்திலும் மகிழ்ச்சி பரவட்டும் என தொழுகையில் ஈடுபட்ட பின்னர் நபர் ஒருவர் கூறியுள்ளார்.

தேசம் தொடர்ந்து முன்னோக்கி செல்லவும், வளம் பெருகவும் வாழ்த்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். நாடே முதலில் முக்கியம் வாய்ந்தது என்றும் ஒவ்வொருவரும் இந்தியரே என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று சித்திக் என்பவர் கூறும்போது, இன்றைய தினம் மிக மகிழ்ச்சியான நாள். இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அன்புடன் தொழுகை நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஈத்-அல்-பிதர் (ரம்ஜான் பண்டிகை) தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நம்முடைய சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கம் ஆகியவற்றிற்கான முதன்மையான பண்பு இன்னும் மேலோங்கட்டும். ஒவ்வொருவரும் மனநிறைவான வகையில் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெறுவதற்காகவும் நான் வேண்டி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com