மார்த்தட்டும் முன் 8-10 சதவீத வளர்ச்சியை இந்தியா அடையட்டும் - ரகுராம் ராஜன்

அடுத்த பத்தாண்டுகளுக்கு 8-10 சதவீத வளர்ச்சியை அடைந்து விட்டு மார்த்தட்ட வேண்டும் என்றார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
மார்த்தட்டும் முன் 8-10 சதவீத வளர்ச்சியை இந்தியா அடையட்டும் - ரகுராம் ராஜன்
Published on

புதுடெல்லி

இந்தியா வளர்ச்சி குறித்து பிரசங்கம் செய்ய வேண்டுமென்றால் 10 ஆண்டுகளுக்கு 8-10 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக வளர்ச்சி விகிதம் வீழ்ந்து வருவதால் நமக்கு எச்சரிக்கை வேண்டும் என்றார் அவர். 1990 கள் முதல் 6-8 சதவீத வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு பெற்றோம் என்றால் பெரியதொரு பொருளாதாரமாக இருப்போம். நாம் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிறியதொரு பொருளாதாரம். ஆனால் நாம் பெரிய நாடாக எண்ணுகிறோம். சீனா இந்தியாவை விட ஐந்து மடங்கு பெரியது.

பத்தாண்டுகளுக்கு பெரிய வளர்ச்சியை நாம் பெற்றால்தான் உலக மக்கள் நம்மை ஏறிட்டு பார்ப்பார்கள் என்றார் ரகுராம் ராஜன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com