நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் - ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம்

நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் என ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
நித்யானந்தா இருக்கும் இடத்தை தெரியப்படுத்துங்கள் - ‘இன்டர்போல்’, சி.பி.ஐ.க்கு கர்நாடக போலீசார் கடிதம்
Published on

பெங்களூரு,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் கடத்தப்பட்ட வழக்கில் நித்யானந்தாவை, அந்த மாநில போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். அதே நேரத்தில் நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த விவரங்களை கர்நாடக ஐகோர்ட்டில் தெரிவிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஏற்கனவே பெண் சீடர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நித்யானந்தா மீது கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். தற்போது கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நித்யானந்தா இருக்கும் இடம் குறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இன்டர்போல் போலீசாரின் உதவியை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நாடியுள்ளனர். இதற்காக நித்யானந்தா இருக்கும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி இன்டர்போல் போலீசாருக்கு, கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அதேபோல, சி.பி.ஐ.க்கும் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com