மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம்- பிரதமர் மோடி

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம்- பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. மகாவீர் ஜெயந்தியையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு உத்வேகமாக உள்ளன என பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com