2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி -பிரகாஷ் ஜவடேகர்

2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி -பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் என்.பி,ஆர்., என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமை தான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இந்தநிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்,

2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி. பொய், வதந்திகள் பரப்புவது, ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கொண்டு வரும் திட்டங்கள் புரியாது.

என்.பி.ஆர். என்பது எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் உள்ளடக்கியது அல்ல, அதன் அம்சம் ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்க நலத்திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடைய உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com