டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெல்லியில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியின் பல பகுதிகளில் அடுத்த 12 மணிநேரத்தில் லேசானது முதல் மித அளவிலான மழை (2 செ.மீ. வரை) பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 12 மணிநேரத்தில் மித அளவிலான (3 முதல் 5 செ.மீ. வரை) மழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com