

பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா போராட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறுகையில், "மராட்டியத்தில் நடந்த அரசியல் மாற்றம் போல் கர்நாடகத்திலும் நடைபெறும். பா.ஜனதா அணிக்கு வந்த அஜித் பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைத்துள்ளது. காங்கிரஸ் அரசு மூன்று மாதங்கள் கூட இருக்காது. மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டத்தை இந்த அரசு வாபஸ் பெறுகிறது. இது சரியல்ல" என்றார்.