லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம்: கர்நாடக வரைவு திட்டத்தை ஆய்வு செய்வோம் - உள்துறை அமைச்சகம்

லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் குறித்த கர்நாடக அரசின் வரைவு திட்டத்தை ஆய்வு செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #Lingayat
லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம்: கர்நாடக வரைவு திட்டத்தை ஆய்வு செய்வோம் - உள்துறை அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

கர்நாடகத்தில் லிங்காயத் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களின் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரி வலியுறுத்தி வந்தனர். லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரைகள் குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று ஒப்பதல் அளிக்கப்பட்டது. லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் குறித்த கர்நாடக அரசின் வரைவு திட்டத்தை ஆய்வு செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், லிங்காயத் மற்றும் வீரசைவ லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்குவது குறித்து கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு திட்டத்தை கர்நாடக அரசு அனுப்பினால், அதுபற்றி உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றார். உள்துறை அமைச்சகம் வரைவு அறிக்கையை பெற்றதும், அதை பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு கமிஷனருக்கு அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com