வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவர் 201819 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிமான வரி கணக்குகளை ஆதார், பான் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 ஏஏ, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன் பான் எண் என்று அழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது.

மத்திய அரசு மேல்முறையீடு குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

ஆதார் பற்றிய வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டுதான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் இது தொடர்பான வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகத்தக்கது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com