'அக்பர் - சீதா' சிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது: விஷ்வ இந்து பரிஷத் கோர்ட்டில் வழக்கு

மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
'அக்பர் - சீதா' சிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது: விஷ்வ இந்து பரிஷத் கோர்ட்டில் வழக்கு
Published on

கொல்கத்தா,

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் உள்ள 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் முன்னரே பெயர் வைத்துள்ளனர்.

'சீதா' மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வருகின்ற 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com