மதுபானக் கொள்கை வழக்கு: விடுதலையை எதிர்த்து சிபிஐ வழக்கு: கெஜ்ரிவால் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கு: விடுதலையை எதிர்த்து சிபிஐ வழக்கு: கெஜ்ரிவால் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Published on

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அரவிந்த கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரை கடந்த வாரம் சிறப்பு கோர்ட்டு விடுவித்தது . இந்த நிலையில், கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை சிறப்பு கோர்ட் விடுதலை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது.

வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையான விசாரணை மூலம் கண்டறியாமல், வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தவறானது” என்று கூறினார். இதையடுத்து, சிபிஐயின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய கோர்ட்டு, இது தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com