தூய்மையான காற்றை கொண்ட நகரங்கள் பட்டியல் - நெல்லை முதலிடம்

இந்தியாவில் தூய்மையான காற்றை கொண்ட நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
தூய்மையான காற்றை கொண்ட நகரங்கள் பட்டியல் - நெல்லை முதலிடம்
Published on

புது டெல்லி,

இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை ஜனவரி 9 அன்று வெளியிட்டது. அதில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் மற்றும் சுத்தமான காற்றை கொண்ட நகரங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காற்றின் தர அளவீடு AQI அளவுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது, 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது, அதேசமயம், நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும். 101 முதல் 200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டது. ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.

அதன்பிறகு "மோசமானது" (AQI 201-300) நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும், "மிகவும் மோசமானது" (301-400) - சுவாச நோய்கள் ஏற்படக்கூடும். "கடுமையானது " (401-450), மற்றும் 450க்கு மேல் "கடுமையாகத் தீவிரமானது" - ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும்.

இந்நிலையில் காற்றுத் தரக் குறியீடு பட்டியலில் சுத்தமான காற்றும் இருக்கும் நகரம் என தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதலித்தை பிடித்துள்ளது. அதன்படி, நெல்லையில் காற்றுத் தரக் குறியீடு 33 ஆக உள்ளது. இந்த பட்டியலில் தூய்மையான காற்றை கொண்டதாக தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்தை பெற்றுள்ளது. தஞ்சாவூரின் காற்றுத் தரக் குறியீடு 47 ஆக உள்ளது.

தூய்மையான காற்றின் தரத்தை கொண்ட பட்டியலில், நஹர்லகுன் (அருணாச்சல பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), Chhal (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல காற்று மாசு மாசு அதிகம் உள்ள பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு காற்றுத் தரக் குறியீடு 357 ஆக உள்ளது. இதனை அடுத்து காசியாபாத் (உத்தரப்பிரதேசம்), பைர்னிஹாட் (மேகாலயா), சண்டிகர் (சண்டிகர்), ஹாபூர் (உத்தரப்பிரதேசம்), தன்பாத் (ஜார்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உத்தரப்பிரதேசம்), குஞ்சேமுரா (மகாராஷ்டிரா), நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய நகரங்கள் மோசமான காற்று மாசுபாட்டை கொண்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com