'வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 420 பேர் உயிரிழந்தனர். சுமார் 397 பேர் படுகாயமடைந்த நிலையில், 47 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, கேரள மாநில வரலாற்றில் மிக மோசமான பேரிடராக பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுகு வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், 17 குடும்பங்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 1,600 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com