

இரவு ஊரடங்கு
மராட்டியத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முழு ஊரடங்கு
கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு விரும்பவில்லை. எனவே பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். நிச்சயம் முககவசம் அணிய வேண்டும்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகளவில் தேவைப்படவில்லை.
தினசரி மருத்துவ ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்னை எட்டும் போது மட்டுமே மாநிலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.