எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநில பா.ஜனதா எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அனந்த்குமார் ஹெக்டே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சுதந்திர போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அவர் பேசுகையில், காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது என்றார். அனந்தகுமார் எம்.பியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற மக்களவையில் எதிரொலித்தது. மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனந்தகுமார் ஹெக்டே பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com