பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குளிர் கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும், ரபேல் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, அவை துவங்கும் முன்பு, பாராளுமன்ற வளாகத்தில், மேகதாது பிரச்சினைக்காக அதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com