

புதுடெல்லி,
ஜனாதிபதி உரையுடன் இந்திய நாடாளுமன்றம் கடந்த 29-ந்தேதி கூடியது. பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 5 மணி வரை சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார். அதன்பின் சபை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் சபையில் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. இதனால் மாநிலங்களவை இரவு 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.