அதானி குழும விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு.!

ஒத்திவைப்புக்கு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்றத்தில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாளை வரையில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
அதானி குழும விவகாரம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு.!
Published on

புதுடெல்லி,

2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் துவங்கியது. அதன் பிறகு நேற்று மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற மக்களவை காலையில் துவங்கியது.

இன்று காலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், வெளிநாட்டு குழு ஒன்று நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை கண்காணிக்க வந்துள்ளதாக குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அதானி குழும பங்குகளை எல்ஐசி வாங்கியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

இந்த அமளியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவையை இன்று மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொடங்கிய நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்கட்சிகள் அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரியதால் மீண்டும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com