கர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?

கர்நாடகாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மண்டியா, ஹாசன், கோலார் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவார்என்று கூறப்பட்டு இருந்தது. மண்டியா தொகுதியில் அக்கட்சியின் மாநில தலைவரான குமாரசாமி போட்டியிடுவதும் உறுதி செய்யப்பட்டு இருந்தது. கோலார் தொகுதியில் யார் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதுதெடர்பாக நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடன், குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டியாவில் குமாரசாமியும், ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவும்,கோலார் தொகுதியில் மல்லேஸ் பாபுவும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com