சபாநாயகர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

சபாநாயகர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதமும், தொடரின் இறுதியில் 'வந்தே மாதரம்' பாடலும் ஒலிப்பது வழக்கம். நேற்று சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால், மக்களவையில் ஆடியோ வசதி மூலமாக தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அப்போதுதான் சபாநாயகர் ஓம்பிர்லா சபைக்குள் நுழைந்தார்.

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் ஓம்பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்தினார். சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விடுவதாக அவர் கூறினார். இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com