எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கின

அதானி விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கின
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். அதன்படி மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com