ராஜஸ்தானில் மக்களவை சபாநாயகர் உதவியாளர்களை தாக்கி செல்போன்கள் கொள்ளை

ராஜஸ்தானில் மக்களவை சபாநாயகர் உதவியாளர்களை தாக்கி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மக்களவை சபாநாயகர் உதவியாளர்களை தாக்கி செல்போன்கள் கொள்ளை
Published on

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் என்ற பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முகாம் அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அவரது தனி உதவியாளர்கள் ஜீவந்தர் ஜெயின் (வயது 43), ராகவேந்திர சிங் ஆகியோர் தங்களது கார் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக்கொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com