நில முறைகேடு விவகாரம்: நேரில் ஆஜராக சித்தராமையாவுக்கு போலீசார் நோட்டீஸ்

நில முறைகேடு தொடர்பாக நவம்பர் 6ல் மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நில முறைகேடு விவகாரம்: நேரில் ஆஜராக சித்தராமையாவுக்கு போலீசார் நோட்டீஸ்
Published on

மைசூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது.

இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த அக். 25ம் தேதி தான் சித்தராமையாவின் மனைவி பார்வதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இப்போது அம்மாநில முதல்-மந்திரிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக லோக் ஆயுக்தா போலீஸ் பிடி இறுகி வருவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com