பொது சிவில் சட்டம், ஒரே நாடு- ஒரே தேர்தல்.. 3 கோடி பேருக்கு இலவச வீடு: பா.ஜனதா தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
பொது சிவில் சட்டம், ஒரே நாடு- ஒரே தேர்தல்.. 3 கோடி பேருக்கு இலவச வீடு: பா.ஜனதா தேர்தல் அறிக்கை
Published on

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com