எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கிய உணவில் நீண்ட முடி; பெண் எம்.பி. அதிர்ச்சி

எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கிய வெண்ணெய் அப்பத்தில் நீண்ட முடி காணப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கிய உணவில் நீண்ட முடி; பெண் எம்.பி. அதிர்ச்சி
Published on

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மற்றும் பிரபல நடிகையானவர் மிமி சக்ரவர்த்தி. இவர் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்து உள்ளார்.

அவருக்கு வழங்கிய வெண்ணெய் அப்பம் எனப்படும் உணவு பண்டத்தில் நீண்டதொரு முடி கிடந்து உள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்றிரவு தனது டுவிட்டர் பக்கத்தில் அதனை படத்துடன் பகிர்ந்து உள்ளார். அதில், அன்புக்குரிய எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு, உங்களுடன் பயணிக்கும் நபர்களை கவனிக்காமல் இருக்கும் அளவுக்கு பெரிய ஆளாக நீங்கள் வளர்ந்து வீட்டீர்கள் என நினைக்கிறேன்.

சாப்பிடும் உணவில் முடி இருப்பது என்பது எளிதில் எடுத்து கொள்ள கூடிய விசயம் இல்லை என நான் நினைக்கிறேன். இதுபற்றி உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் மெயில் அனுப்பினேன்.

ஆனால், அதற்கு பதில் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று என நினைத்து விட்டீர்கள். ருசித்து சாப்பிடும்போது, வாயில் முடி வந்து விட்டது என வேதனை தெரிவித்து உள்ள மிமி, இதற்கு தனது இ-மெயிலுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என கேட்டு உள்ளார்.

எனினும், வாடிக்கையாளர் தொடர்புக்கான குழுவினர் இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்து, உங்களுக்கு இ-மெயில் அனுப்புவார்கள் என எமிரேட்ஸ் நிறுவனம் பதில் அளித்து உள்ளது.

2019-ம் ஆண்டு ஜாதவ்பூர் தொகுதியில் மிமி சக்ரவர்த்தி போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com