

புதுடெல்லி,
இந்தியாவில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்களின் பட்டியலில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை தொடர்ந்து, பிரதமர் மோடி 4-வது இடத்தை பெறுகிறார்.
இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மாளவியா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த 4-வது பிரதமர் என்ற சாதனையை பிரதமர் மோடி இன்று (அதாவது நேற்று) படைத்து இருக்கிறார். அத்துடன், நீண்ட காலம் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார். வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். பிரதமர் மோடி அந்த கால அளவை கடந்து விட்டார் என்று தெரிவித்து இருக்கிறார்.