

மும்பை,
மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் காந்தி ஜெயந்தி அன்று போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அதையும் மீறி போராட்டம் நடத்தியதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அபிஜீத் திப்கே மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய 3 பேருக்கு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடை பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய் தபோது, கடந்த நவம்பர் 23-ந்தேதி மும்பை போலீசார் 3 பேருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக் கப்பட்டது.