2 நாள் பயணமாக பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு செல்கிறார்

இந்தியா - கனடா இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு செல்கிறார்
Published on: 

புதுடெல்லி,

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக வருகிற டிசம்பர் மாதம் கனடாவுக்கு செல்ல உள்ளார்.

சமீபத்தில் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் தொலை பேசியில் உரையாடிய நிலை மில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 11,12 தேதிகளில் கனடா வுக்குப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் மோடி-கனடா பிரதமர் மார்க் கார்னியின் தொலைபேசி உரையாடலில், இரு நாடுகளின் உறவுகளில் உள்ள நேர்மறையான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்தவும் வர்த்தகம், எரிசக்தி, தொழில் நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையே யான உறவுகளில் உறுதியான முடிவுகளை நோக்கிச் செயல்படவும் ஒப்புக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் - கனடா பிரதமர் மார்க் கார்னி, கால்கரியில் உள்ள ஒரு உணவகத்தில் பொது மக்களுடன் உரையாடியபோது பிரதமர் மோடியின் பயணத் தேதியை உறுதிப்படுத்தினார்.

அப்போது அவர் கூறும் போது, நான் இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன். அவரது கனடா இந்தப் பயணம் டொராண்டோ, ஒட் டாவா ஆகிய நகரங்களில் நடைபெறும், இந்தப் பயணத்தில் இரு நாடுகளின் உறவுகளை இன்னும் விரிவுபடுத்த ஆலோசிப்போம் என்றார்.

இந்தியா - கனடா இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதன் மூலம் - 2030-ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் கனடா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

2023ல் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தால் இருநாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என்று இருநாட்டு தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com