லாரி - பைக் மோதி விபத்து - 3 பேர் பலி

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பைக் மீது மோதியது.
லாரி - பைக் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தும்கூர் நந்திஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது தாபஸ் பேட்டை என்ற பகுதியில் உள்ள ஒரு சோலார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராஜேஷ் (25), தனஞ்சய் (27), தனுஷ் (23) ஆகிய 3 பேரும் இரவு வேலை முடிந்து ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தும்கூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com