அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி

விபத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
lorry accident
Published on: 

கஞ்சம்,

ஒடிசாவில் அதிவேகமாக சென்ற லாரி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் சாமகண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. சில வாகனங்கள் சாலையை கடப்பதற்காக மெதுவாக சென்றன. அப்போது, அதிவேகமாக வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார், பைக் என அடுத்தடுத்து வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 10 பேரை அருகிலுள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு விரைந்த மாவட்ட எஸ்.பி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com