லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் சாவு

குந்தாப்புராவில் லாரி -மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் சாவு
Published on

உடுப்பி;

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே ஹெலகேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் ஜோகி (வயது 42). இவர் தனது சகோதரர் ஆகாஸ் ஜோகியுடன் மோட்டார் சைக்கிளில் தள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஸ் ஜோகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஆகாஸ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு நெடுஞ்சாலை போலீசார் வந்தனர். அவர்கள் விபத்தில் இறந்த சதீசின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com