கூகுள் மேப்பை நம்பி கண்ணீர் விட்ட வெளிநாட்டு பயணி...பெண் டிரைவர் செய்த செயல் - தீயாய் பரவும் வீடியோ

சுற்றுலா பயணி ஒருவர், கூகுள் மேப்பை நம்பி தவறான வழியில் சென்றதால் திசை தெரியாமல் தவித்துள்ளார்.
கோவா,
கோவாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர், கூகுள் மேப்பை நம்பி தவறான வழியில் சென்றதால் திசை தெரியாமல் தவித்துள்ளார். அப்போது அவருக்கு உதவிய பெண் ரெபிடோ (Rapido) டிரைவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
திசை தெரியாமல் அச்சத்துடன் இருந்த அந்த சுற்றுலா பயணியை பார்த்த பெண் ரெபிடோ டிரைவர், அவரை பாதுகாப்பாக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, அவர் தங்கி இருந்த விடுதியில் விட்டார்.
பாதுகாப்பாக விடுதிக்கு சென்றடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, உதவி செய்த பெண் டிரைவரை கட்டியணைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






