மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று அம்மாநில எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும். உத்தரபிரதேச மாதிரியில் இங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அந்த ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால் இந்து கோவில்களில் பக்தி பாடல்களை ஒலிக்க செய்வதாக ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் முத்தாலிக் கூறியுள்ளார். அதற்கு நான் ஆதரவு வழங்குவேன். அரசு அலட்சியமாக நடந்து கொள்ளும் போக்கால் மாநிலத்தில் மோதல் நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. இதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com