ஆண்டர்சன்பேட்டையில் லூர்து மாதா தேர் பவனி

ஆண்டர்சன்பேட்டையில் லூர்து மாதா தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
ஆண்டர்சன்பேட்டையில் லூர்து மாதா தேர் பவனி
Published on

ஆண்டர்சன்பேட்டை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை லூர்து நகர் பகுதியில் லூர்து மாதா தேவாலயம் அமைந்துள்ளது இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாதாவின் பிறந்தநாளையொட்டி தேர்பவனி நடந்தது. இதில் பங்கு தந்தை ஜெபஸ்டின் தலைமை தாங்கினார்.

நகரசபை முன்னாள் நிதி நிலைக்குழு தலைவர் ஸ்டான்லி உள்பட பலர் பங்கேற்றனர். தேவாலயத்தில் இருந்து மாதாவின் சொரூபத்துடன் புறப்பட்ட தேர்பவனி ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் இருந்து சூசையப்பர் தேவாலயம் மார்க்கமாக வந்து மீண்டும் லூர்து மாதா தேவாலயத்தை வந்தடைந்தது.

தேர்பவனியையொட்டி வழிநெடுகிலும் திரளான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர். திருவிழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com