விமான பயணத்தில் மலர்ந்த காதல்... கேரள பெண்ணை கரம்பிடித்த இத்தாலி இளைஞர்...!

விமான பயணத்தின் போது அறிமுகமாகி, காதலர்களாகிய இத்தாலி இளைஞரும் கேரள பெண்ணும் பாலக்காட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
விமான பயணத்தில் மலர்ந்த காதல்... கேரள பெண்ணை கரம்பிடித்த இத்தாலி இளைஞர்...!
Published on

பாலக்காடு,

விமான பயணத்தின் போது அறிமுகமாகி, பின்னர் காதலர்களாகிய இத்தாலி இளைஞரும் கேரள பெண்ணும் பாலக்காட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் வீணா. கேரளாவில் பொறியியல் படித்த இவர், உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் பயணித்த விமானத்தில் அருகே இருந்த இருக்கையில் இத்தாலியைச் சேர்ந்த டேரியா என்ற இளைஞரும் பயணித்துள்ளார்.

அருகருகே அமர்ந்திருந்த இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, தொடர்ந்து அது காதலாகியுள்ளது. 2017-ல் அறிமுகமாகி அடுத்த ஆண்டே இருவரும் காதல் வயப்படவே, 6 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக காதலித்து வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இருவரும் அமெரிக்காவில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கேரளாவிற்கு வந்து வீணாவின் உறவுகள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். விழாவுக்கு வந்த உறவினர்கள் மணமக்களை மனமாற வாழ்த்தி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com