

சமஸ்திப்பூர்,
பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சுவேதா குமாரி (வயது 20) என்ற மாணவி ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். இதன்பின், மாணவி சுவேதா மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.