அடுத்தடுத்து காதலன் - காதலி தற்கொலை ...! காரணம் என்ன..?

கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை.
அடுத்தடுத்து காதலன் - காதலி தற்கொலை ...! காரணம் என்ன..?
Published on

பாலக்காடு:

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ளது இளமனூர். இங்கு வசிப்பவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன் (22). முதுவெல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன் மாத்யூ இவரது மகள் சோனா ஷெரீன் (22)

இவர்கள் 2 பேரும் கொல்லம் மாவட்டத்தில் பத்மநாபபுரம் என்ற இடத்தில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜெபின் ஜோன் ( 22) தனது வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது.

சிறிது நேரம் கழித்து சோனா மெரீன் தனது வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இருவர் உடலையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

ஜெபின் தற்கொலை செய்ததை அறிந்த பிறகு சோனா அதே போல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com