பழைய பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற திட்டம்: கேரளா புது முயற்சி

கேரளாவில் , அரசு போக்குவரத்து கழகத்தின் பழைய தாழ்தள பஸ்களை,வகுப்பறைகளாகவும், புத்தகசாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
பழைய பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற திட்டம்: கேரளா புது முயற்சி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் , அரசு போக்குவரத்து கழகத்தின் பழைய தாழ்தள பஸ்களை,வகுப்பறைகளாகவும், புத்தகசாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

கேரளாவில் அரசு போக்கு வரத்து கழகம் நீண்ட நெடும் காலமாக பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்துபோக்கு வரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டும் பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்

தற்போது கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் காலாவதியான பஸ்கள் ஏராளமாக உள்ளன. இந்த பஸ்களை பயன் உள்ள வகையில் மாற்றி அதனை வாடகைக்கு விட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து உயர் அதிகாரிகள் எண்ணினர். இதற்கான முயற்சிகளிலும்அதிகாரிகள் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக மலை கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் டெப்போக்களில் நிற்கும் பஸ்களை தங்கும் அறைகளாக மாற்றி வாடகைக்கு விடும் திட்டம்நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து காலாவதியான

பஸ்களை பழைய இரும்பு கடையில் எடைக்குன்போடுவதைவிட அவற்றை பள்ளிகளில் வகுப்பறைகளாகவும், நூலகங் களாகவும் மாற்றி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டது.

இது பற்றி கல்வி துறை மந்திரி சிவன் குட்டியிடம் தெரிவிக்கப்பட்ட து. இதனை ஏற்று கொண்ட அவர் முதற்கட்டமாக மணக்காடு பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2 வகுப்பறைகள் அமைக்க காலாவதியான 2 தாழ்தள பஸ்களை வழங்க கேட்டுக் கொண்டார். இது போல பாலக்காடு பகுதியில் உள்ள பள்ளியில் நூலகம் மற்றும் வகுப்பறைகள் அமைக்கவும் பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதுஇந்த திட்டங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com