சீரான எரிபொருள் கிடைக்க பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம் - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை என ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
சீரான எரிபொருள் கிடைக்க பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்  - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி
Published on

புதுடெல்லி,

மக்களவையில் ராகுல் காந்தி கேள்விக்கு ஹர்தீப் சிங் புரி பதில் அளிக்கையில்,

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விநியோகம் சீராக உள்ளது. இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு முன்னுரி அடிப்படையில் கேஸ் விநியோகம்.நாட்டின் மொத்த எல்.பி.ஜி தேவையில் 87 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கானது. அதற்கு முன்னுரை வழங்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யைவிட மாற்று வழியில் கூடுதல் எண்ணெய் வருகிறது.

உணவகங்களுக்கு தேவையான சிலிண்டர் விநியோகத்தில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். கேஸ் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு மறுப்பு, தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம். சீரான எரிபொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் 50 சதவீதம் ஹோர்முஸ் நீரினை வழியே நடக்கிறது.

பீதியால் நுகர்வோர் அதிக சிலிண்டர் வாங்கியதால் விநியோகஸ்தர்களால் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எல்.பி.ஜி உற்பத்தி கடந்த சில நாட்களில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை. நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற தருணத்தை எதிர்க்கொண்டதில்லை. உள்நாட்டு தேவைக்காக எல்.பி.ஜி விநியோகம் தடையின்றி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com