பெண்கள் கழிவறைக்குள் செல்ல அனுமதிக்காததால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்பியின் மகன்

பெண்கள் கழிவறைக்குள் செல்ல அனுமதிக்காததால் டெல்லி 5 நட்சத்திர ஓட்டலில் முன்னாள் எம்பியின் மகன் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.
பெண்கள் கழிவறைக்குள் செல்ல அனுமதிக்காததால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்பியின் மகன்
Published on

புதுடெல்லி

பகுஜன சமாஜ் கடசியின் முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டேயின் மகன் ஆஷிஷ் பாண்டே டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றின் முன்பு துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

10 செகண்ட் ஓடும் இந்த வீடியோவில் ஆஷிஷ் பாண்டே துப்பாக்கியுடன் காட்சி தருகிறார். ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த பெண்ணை மிரட்டுகிறார். அந்த பெண் பாண்டே பெண்களின் கழிவறைக்குள் நுழைவதை தடுத்து உள்ளார் எனகூறப்படுகிறது.

பாண்டேயின் பெண் நண்பர் மற்றும் பாதுகாப்புப் வீரர் அவரை பிடித்து அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஓட்டல் ஊழியர்களால் பாண்டே இழுத்துச் செல்லப்பட்டார். அவர்களுக்கு அவர் மிரட்டல் விடுப்பதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடந்த ஒரு விருந்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து டெல்லி போலீசார் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆஷிஷ் பாண்டேயின் சகோதரர் தற்போது உத்தர பிரதேசத்தில் எம்.எல்.ஏவாக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com