விவசாயிக்கு அடித்த பம்பர் பரிசு: ஒரே நாளில் கோடீசுவரரானார்..!

என்றாவது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும், அற்புதம் நடக்கும் என நினைத்த ஷீத்தலின் நம்பிக்கை வீண்போகவில்லை.
விவசாயிக்கு அடித்த பம்பர் பரிசு: ஒரே நாளில் கோடீசுவரரானார்..!
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மகில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில் இவரது மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

என்றாவது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும், அற்புதம் நடக்கும் என நினைத்த ஷீத்தலின் நம்பிக்கை வீண்போகவில்லை. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது க்ரீன் வியூ பூங்காவிற்கு வெளியே உள்ள கடையில் இருந்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.

பின்னர் 4 மணி நேரம் கழித்து ஷீத்தலை தொடர்பு கொண்ட லாட்டரி கடை உரிமையாளர், அவருக்கு ரூ.2.5 கோடி பம்பர் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ஷீத்தல் ஊர் மக்களுக்கு இனிப்பு வழங்கி குடும்பத்துடன் கொண்டாடினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல் தனது வீட்டில் மகிழ்ச்சி நிலவுவதாகவும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் வீட்டில் குவிந்து வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com