நிலவின் 2வது புகைப்படம்: சந்திரயான்-2 எடுத்து அனுப்பியது

சந்திரயான்-2 எடுத்த நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் 2வது புகைப்படம்: சந்திரயான்-2 எடுத்து அனுப்பியது
Published on

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான்-2 கடந்த 21 ந்தேதி நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. 2650 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை சந்திரயான்-2 விண்கலம் எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான்-2ன் டெர்ரைன் மேப்பிங் கேமரா -2 (டிஎம்சி -2) ஆல் சந்திரனின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இது சுமார் 4375 கிமீ உயரத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com