நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: உயிர் தப்பிய 22 பயணிகள்

தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: உயிர் தப்பிய 22 பயணிகள்
Published on

தாணே,

நவி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு எற்பட்டது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் இன்று மதியம் நெடுஞ்சாலையில் 22 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்தது. எனினும், இதில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இன்ஜினிலிருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தி, பயணிகளை வெளியேறுமாறு எச்சரித்தார் இதனால் பயணிகள் அவசரமாக வெளியேறினார்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி அக்ரே கூறுகையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் ஒரு தண்ணீர் டேங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு குளிர்விக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காவல் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து தீ ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com