

ராஞ்சி,
ராஞ்சி பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:- எம்.எஸ். டோனியை நேற்று ராஜ்பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மிகவும் திறமை மிக்கவர் என்பதால், டோனி மீது மக்கள் அன்பு செலுத்துகின்றனர் என்றார்.
மேலும் ஜார்க்கண்ட், கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான நகரமாக டோனியால் மாறிவிட்டது என்றார்.
அதேபோல், வில்வித்தையில் சாதனை படைத்த தீபிகா குமாரி மற்றும் 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் ஜெய்பால் சிங் முண்டா ஆகியோரின் சாதனைகளையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.