சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை: ஹிஜாப் சர்ச்சை குறித்து ராகுல் காந்தி டுவிட்

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் ஆடைகளை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாட்டை கர்நாடக அரசு விதித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை: ஹிஜாப் சர்ச்சை குறித்து ராகுல் காந்தி டுவிட்
Published on

புதுடெல்லி,

உடுப்பியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், சீருடைக்கு மேல் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனாலும் அந்த மாணவிகள் பர்தா அணிந்து வருவதை நிறுத்தவில்லை. பர்தா அணிந்து வந்தால் பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த பள்ளி கூறியுள்ளது. அந்த மாணவிகள், தாங்கள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு சவால் விடும் வகையில் இந்து மாணவர்கள் 100 பேர் காவி துண்டு போட்டு பள்ளிக்கு வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பர்தா அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை தீராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டு இருப்பதாவது; -

ஹிஜாப் அணிவதை எல்லாம் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக கொண்டு வருவதன் மூலம், இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம். சரஸ்வதி தேவி அனைவருக்கும் அறிவை வழங்குகிறார். அவர் யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com