மத்திய பிரதேசம்: டிராக்டர் கவிழ்ந்ததில் 6 பேர் பலி; 40 பேர் காயம்

சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம்:  டிராக்டர் கவிழ்ந்ததில் 6 பேர் பலி; 40 பேர் காயம்
Published on

அனுப்பூர்

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் பத்மேனியா பகுதியில் இருந்து டிராக்டர் ஒன்றில் 50-க்கும் மேற்பட்டோர் கோவிலில் பூஜை ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

அவர்களுடைய வாகனம் பிஜாவுரா கிராமம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் விபத்தில் சிக்கியது. இதில் டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியானார்கள். 40 மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு உமரியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கும், பாலி சமூக சுகாதார மையத்திற்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com