

போபால்,
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், திகம்கார் பகுதியில் கும்பல் ஒன்று சாராய விற்பனையில் ஈடுபடுகிறது என வந்த தகவலை அடுத்து, அதுபற்றி செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சிலர் சென்றுள்ளனர்.
அவர்கள் செய்தி சேகரித்து விட்டு திரும்பி வரும் வழியில், மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
இதன்பின்னர் அந்த மர்ம கும்பல் தப்பியோடி விட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஜிதேந்திரா மற்றும் மோனு தாக்குர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என காவல் நிலைய அதிகாரி மனோஜ் சாக்கியா கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.