

போபால்,
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் மத்திய பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் (வயது 61) கொரோனா தொற்றுக்கு ஆளானார். கொரோனாவிடம் சிக்கிய முதல் முதல்-மந்திரி இவர் ஆவார்.
இவருக்கு தொற்று இருப்பது கடந்த 25-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. உடனே போபாலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அவர் குணமடைந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 7 நாட்களுக்கு அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.