மத்திய பிரதேசம்: ஆளுநருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் கடிதம்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளுநருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பிரதேசம்: ஆளுநருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் கடிதம்
Published on

மத்திய பிரதேசம்,

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

மாலையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவு முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் பா.ஜனதாவுடன் நெருங்கிய மோதல் நீடித்தது.

காங்கிரஸ் 113, பா.ஜனதா 110 என முன்னிலை நிலவரம் இருந்தது. இப்போது அதில் மாற்றம் நேரிட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பா.ஜனதா 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் பெற்றுள்ள வெற்றிகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் இரவே சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com