ஏடிஎம் -ல் வந்த காந்தியின் படம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டுகள்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமல் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
ஏடிஎம் -ல் வந்த காந்தியின் படம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டுகள்
Published on


மத்திய பிரதேச மாநிலம் மொரெனா மாவட்டத்திலுள்ள கணேஷ்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., ஒன்றில் கோவர்தன் சர்மா என்பவர் பணம் எடுத்தார். எ.டி.எம்.,மில் எடுத்த பணத்தை கண்டவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணத்தில் நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமலேயே வந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டின் எண்கள் 010788, 010789, 970788 மற்றும் 970789.ன்கடந்த் ஜனவரி மாதத்தில் இது 3 வது முறையாகௌம் இவ்வாறு பிழையாக் அச்சிடபட்ட நோட்டு புழக்கத்தில் வருவது.


உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு கோவர்தன் புகார் அளித்தார். இதுகுறித்து விளக்கமளித்த வங்கி அதிகாரிகள், அச்சுப்பிழை காரணமாக ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.

இது போல் கடந்த சில நாட்களுக்கு முன் காந்திபடம் இல்லாத ரூ. 2 ஆயிரம் நோட்டி ஷிவ்பூர் பகுதியில் புழக்கத்தில் கண்டுபிடிக்கபட்டது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com